சிவராஜ் சிங் செளஹான்  கோப்புப் படம்
இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டம்: மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அமலாகும்!

குடியுரிமை திருத்தச் சட்டமானது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சிவராஜ் சிங் செளஹான், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என என்ற நம்பிக்கையுள்ளது. இது மிகவும் தேவையானது. இந்த சட்டம் மூலம் மதரீதியாக துன்புறுத்தலுக்குள்ளான அண்டை நாட்டைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவு சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை கிடைக்கும். இது யாருக்கும் எதிரானதல்ல.

குடியுரிமை திருத்தச் சட்டமானது மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளிலிருந்து இந்தியாவில் புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிகள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT