இந்தியா

விவசாயிகள் பேரணி: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

DIN

தில்லியில் விவசாயிகள் நடத்தும் சலோ பேரணியால் தில்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், தில்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய விவசாய சங்கள சங்கங்களான சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்), கிசான் மஸ்தூா் மோா்ச்சா (கேஎம்எம்) மற்றும் பல விவசாய சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துவதற்காக ‘தில்லி சலோ மாா்ச்’ அறிவித்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி டிராக்டா் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனர்.

2020 விவசாய போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பின் பாரதிய கிசான் யூனியன் விவசாயிகளின் தில்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், சம்யுக்த கிசான் மோா்ச்சா அமைப்பு போராட்டத்தில் பங்கேற்பதை இந்த முறை தவிா்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT