முகப்பு
இந்தியா

மாநிலங்களவை எம்பி: சோனியா இன்று வேட்புமனு தாக்கல்!

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல்

Updated On : 14 பிப்ரவரி, 2024 at 3:02 AM
​சோனியா காந்தி (கோப்புப்படம்)
பகிர்:

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை(பிப்.15) கடைசி நாளாகும்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், இதற்காக தில்லியில் இருந்து ஜெய்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது மக்களவை எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலே தான் போட்டியிடும் கடைசி தோ்தல் என்று தெரிவித்திருந்தாா்.

மேலும், சோனியாவின் பாரம்பரிய தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் இந்த முறை அவரின் மகள் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.