கோப்புப்படம்
இந்தியா

மாயாவதிக்காக இந்தியா கூட்டணியின் கதவுகள் திறந்திருக்கின்றன - காங்கிரஸ்

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ’இந்தியா’ கூட்டணியில் இணைய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

DIN

புது தில்லி: பகுஜன் சமாஜ் கட்சிக்காக இந்தியா கூட்டணியின் கதவுகள் திறந்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அங்கம் வகிக்கின்றன. உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காணப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ’இந்தியா’ கூட்டணியில் இணைய வேண்டுமென அம்மாநில காங்கிரஸ் தலைவர்(பொறுப்பு) அவினாஷ் பாண்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்ப்பதில் எங்களுடன் இணைந்து கொள்வது, மாயாவதியின் விருப்பத்தை பொறுத்தது. எனினும், பகுஜன் சமாஜ் கட்சி ’இந்தியா’ கூட்டணியில் இணைய வேண்டுமென்பதில் அனைவருக்கும் அதீத விருப்பம் உள்ளது. மாயாவதிக்காக இந்தியா கூட்டணியின் கதவுகள் திறந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT