இந்தியா

கைதான அரசு அதிகாரியின் வீட்டில் ரொக்கம் மற்றும் நகைகள்... இவ்வளவா?

DIN

தெலங்கானா மாநிலத்தில் பெண் நிர்வாக பொறியாளர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.1.51 கோடி மதிப்புள்ள 3.6 கிலோ தங்க நகைகள், ரூ.65.5 லட்சம் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக அந்த அதிகாரி அலுவலகத்தில் கையூட்டு பெற முயன்றபோது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார்.

உரிமம் பெற்ற ஒப்பந்ததாரரிடம் 84 ஆயிரம் லஞ்சமாக கேட்டு அதனை பெற்ற போது அதிகாரிகளிடம் சிக்கினார் பொறியாளர்.

பழங்குடி நலன் கட்டுமான துறையில் நிர்வாக பொறியாளராக பணியாற்றும் அதிகாரியான இவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை விசாரணையின் பகுதியாக சேர்க்கப்பட்டதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்க கோடை உழவு செய்வது அவசியம்

SCROLL FOR NEXT