இந்தியா

காஷ்மீர் போல மாறிய ஹரியாணா சூழல்: விவசாயிகள்

கோரிக்கைகளை அரசு ஏற்காததால், இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

DIN

காஷ்மீர் போல பதற்றம் நிறைந்ததாக ஹரியாணாவின் சூழல் மாறியுள்ளதாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர், தில்லிக்குள் எங்களை நுழையவிடக்கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது தெளிவாகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்தவாவது அனுமதி தர வேண்டும்.

அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காததால், இனி என்ன நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தில்லிக்குள் நுழையும் போராட்டத்தில் எங்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்படுகின்றன. எங்கள் டிராக்டர்களின் டயர்கள் கிழிக்கப்படுகின்றன.

விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என ஹரியாணா டிஜிபி தெரிவித்துள்ளார். அதனால், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹரியாணாவின் சூழல் காஷ்மீர் போல பதற்றமானதாக மாறியுள்ளது. தில்லி நோக்கி பிப். 21ஆம் தேதி பேரணி நடத்துவோம். எங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு அரசே பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT