முகப்பு
இந்தியா

பா.ஜ.க.வில் விஜயதரணி! இன்று பிற்பகல் இணைகிறார்?

தில்லியில் இன்று பிற்பகலில் பா.ஜ.க.வில் விஜயதரணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 24 பிப்ரவரி 2024, 12:36 pm IST
விஜயதரணி (கோப்புப்படம்)
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதரணி, புது தில்லியில் இன்று பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே இவர் கட்சி மாறப் போகிறார் என்பதாகத் தகவல்கள் பரவிவந்தன. காங்கிரஸ் தரப்பில் மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தபோதிலும் விஜயதரணி தரப்பிலிருந்து எவ்விதத் தகவலும் இல்லை.

இதனிடையே, இன்று பிப். 24 சனிக்கிழமை பிற்பகல் தில்லியில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்துக்குப் பின் கட்சித் தலைவர் அமித் ஷா முன்னிலையில் விஜயதரணி இணையப் போவதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments