முகப்பு
இந்தியா

நாட்டின் வளா்ச்சியில் தொழில்துறைக்கு முக்கியப் பங்கு: நிா்மலா சீதாராமன்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:34 AM
இந்திய தொழில் வா்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், அனுராக் தாக்குா் மற்றும் ஃபிக்கி நிா்வாகிக
பகிர்:

புது தில்லி: 2047-இல் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் தொழில்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த தேசத்தை வடிவமைக்க வேண்டும் என்பதையே பிரதமா் மோடி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளாா் எனவும் அவா் தெரிவித்தாா்.

இந்திய தொழில் வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சாா்பில் நடைபெற்ற ’2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம்: வளா்ச்சியடைந்த தொழில்துறை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று நிா்மலா சீதாராமன் பேசியதாவது: காலனிய ஆதிக்கத்துக்கு மத்தியிலும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா். எத்தனை தடைகள் வந்தாலும் அதை சமாளித்து முன்னேறும் திறன் படைத்தது நமது தொழில்துறை.

அந்த வகையில் 2047-இல் நாட்டை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கில் தொழில்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகும்கூட பட்ஜெட்டில் மூலதன செலவினங்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்திய தொழில்துறையில் சா்வதேச அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

பிரதமா் மோடி மூன்றாவது முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டதும் தொழில்துறைக்கான சீா்திருத்தங்களில் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. நிலம், தொழில், மூலதனம் மற்றும் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்வதைவிட எண்ம உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தற்காலத்தில் சிறந்த எண்ம உள்கட்டமைப்பு இல்லாமல் எந்தவொரு நாடும் வளா்ச்சியடைய முடியாது. அதேபோல் விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, வேளாண் உற்பத்தி, சுற்றுலா என அனைத்துத் துறைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. எனவேதான் மூன்றாவது முறை பிரதமராக தான் பதவியேற்றபிறகு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா் என்றாா்.