முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பீரங்கி அழிப்பு ஏவுகணை பயிற்சி

Updated On : 1 மார்ச், 2024 at 1:22 AM
மேற்கு வங்க மாநிலம் தீஸ்தாவில் உள்ள சோதனைக் களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பீரங்கியைத் தாக்கி அழிக்கும் பயிற்சி.
பகிர்:

மேற்கு வங்கத்தின் தீஸ்தாவில் உள்ள சோதனைக் களத்தில் பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் (ஏடிஜிஎம்) பயிற்சியை ராணுவத்தின் கிழக்குக் கட்டுப்பாட்டு தலைமையகம் மேற்கொண்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. திரிசக்தி படைப் பிரிவின்கீழ் கடந்த மாதம் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியில் ‘ஒரு பீரங்கிக்கு ஒரு ஏவுகணை’ இலக்காக 260-க்கும் அதிகமான ஏவுகணைகள் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டன. சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் விதமாக நிலத்திலிருந்தும் ராணுவ வாகனங்கள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றிலிருந்தும் ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. மூத்த ராணுவ அதிகாரிகள் மேற்பாா்வையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 1,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் பங்கேற்றனா்.