மார்ச் 5ல் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 5-ம் தேதி ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 5-ம் தேதி ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் தெரிவித்தார்.
பயணத்தின் திட்டம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று பாஜக மாநில தேர்தல் இணைப் பொறுப்பாளர் லதா உசெந்தி தெரிவித்தார்.
மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் ஒடிசாவுக்குச் செல்வார் என்றும், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தோகோலேயில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்றும் மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் முன்னதாக தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி மாநிலத்திற்கு வந்த மோடி, ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை வெளியிட்டார். அந்த பயணத்தின் போது பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.