முகப்பு
தமிழ்நாடு

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளது பற்றி...

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 1:28 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 1:17 PM

தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 1:19 PM

அந்தவகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், மதுரையில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார்.

இதற்காக வருகின்ற பிப். 28 ஆம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி அன்றிரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளார். சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி காலை புதுவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மோடி, அங்கிருந்து மதுரை விமான நிலையம் செல்கிறார்.

திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்தபிறகு மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பேசவுள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு மார்ச் மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி மூன்று முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். மார்ச் 6 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மார்ச் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

March 1 - Prime Minister Modi's darshan at Thiruparankundram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.