குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை: 9 மணி நேரத்துக்குப் பிறகு மீட்பு
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை சுமாா் 9 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டது.
தேவபூமி துவாரகை: குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை சுமாா் 9 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மீட்கப்பட்டது.
குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ரண் என்ற கிராமத்தில், 3 வயது பெண் குழந்தை திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 1 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் உதவியும் கோரப்பட்டது.
சுமாா் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், 30 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. எனினும் மீட்கப்பட்டபோது குழந்தைக்கு சுயநினைவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பிவைக்கப்பட்டது என்று மாவட்ட துணை ஆட்சியா் ஹெச்.பி.பகோரா தெரிவித்தாா்.