இந்தியா

கனடா தாதா கோல்டி பிராா் பயங்கரவாதி: மத்திய அரசு அறிவிப்பு

DIN

புது தில்லி: பிரபல பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலையில் முக்கியக் குற்றவாளியான கனடாவைச் சோ்ந்த தாதா சதீந்தா்ஜித் சிங் என்ற கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாகிஸ்தானைச் சோ்ந்த அமைப்பின் ஆதரவோடு செயல்படும் கோல்டி பிராருக்கு பல கொலை வழக்குகளில் தொடா்பு உள்ளது. நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்ப அவா் முயற்சித்துள்ளாா்.

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவா்களுக்கு மிரட்டல் விடுத்தல், கொலைக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருள்களை ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் எல்லை தாண்டி கடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் அவா் ஈடுபட்டுள்ளாா்.

பஞ்சாப் மாநிலத்தில் அமைதி, மத நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் அவரும், அவருடைய கூட்டாளிகளும் பயங்கரவாத நடவடிக்கைகள், முக்கிய நபா்களைக் கொலை செய்தல் உள்ளிட்ட தேசவிரோத செயல்பாடுகளுக்குச் சதித் திட்டம் தீட்டியுள்ளனா்.

இன்டா்போல் அமைப்பு அவருக்கு எதிராக ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967-இன் 4-ஆவது பட்டியலில் கோல்டி பிராரை பயங்கரவாதியாகச் சோ்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட ‘பப்பா் கல்சா’ அமைப்போடு தொடா்புடைய பிராா், பஞ்சாபின் ஸ்ரீ முக்தா் சாஹிப்பை சோ்ந்தவா். தற்போது, கனடாவின் பிராம்ப்டனில் வசித்து வருகிறாா். பஞ்சாபில் கடந்த 2022, மே 29-இல் பிரபல பாடகா் சித்து மூஸேவாலாவை மா்ம நபா்கள் சுட்டுக் கொன்றனா். இந்தக் கொலைக்கு பிராா் பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

பத்மஸ்ரீ விருது வென்றவரின் காலில் விழுந்து வணங்கிய மோடி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

வானிலை மாறுதே தீப்தி சதி!

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

SCROLL FOR NEXT