இந்தியா

ஜலந்தரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!

சண்டீகர், ஜலந்தரின் ஆதம்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சண்டீகர், ஜலந்தரின் ஆதம்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை செய்துகொண்டவர்கள் மன்மோகன் சிங்(59) அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பேத்தி ஆகியோர் ஆவார். மன்மோகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதே அறையில் நால்வரும் பிணமாகக் கிடந்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். அந்த அறையில் தற்கொலை கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அதில், மன்மோகன் நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக எழுதியிருந்தார். 

முதற்கட்ட விசாரணையின்படி, மன்மோகன் தூக்கிலிடுவதற்கு முன்பு, அவரது குடும்பத்தினரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது தெரியவந்தது. 

தம்பதியரின் மூத்த மகள் தனது மகளுடன் பெற்றோரை சந்திக்க வந்துள்ளார்.
மன்மோகனின் மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

மன்மோகனின் மருமகன் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி தொலைபேசியின் அழைப்பை ஏற்காத நிலையில் அவர்கள் இறந்த விஷயம் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கொள்கை தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம்: ஜெய்ராம் ரமேஷ்

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT