முகப்பு
இந்தியா

4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.2.91 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
கோப்புப் படம்
பகிர்:

ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ.2.91 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் ஹைதராபாத் சுங்க அதிகாரிகள் டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் துபாயிலிருந்து வந்த மூன்று பெண்கள் உள்பட 4 பயணிகளை வழிமறித்தில், அவர்களிடமிருந்து 4.597 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் 30 கட்டிகள் மற்றும் 2 செயின்கள் அடங்கும். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →