ஜார்க்கண்ட் கட்சி எம்எல்ஏ சர்ஃபராஸ் அகமது தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம், காண்டே தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்டு பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் சர்ஃபராஸ் அகமது. இந்த நிலையில் இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் பதவியை ராஜிநாமா செய்ததற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சர்ஃபராஸ் அகமதுவின் ராஜிநாமா கடிதத்தை ஜார்க்கண்ட் பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காண்டே தொகுதி டிசம்பர் 31, 2023 முதல் காலியாக உள்ளது என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பதவியை திடீரென ராஜிநாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.