இந்தியா

குஜராத் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி பலி!

DIN

குஜராத்தின் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தில், 3 வயது சிறுமி திங்கள்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.

சுமார் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர், 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்பட்டாள். மீட்கப்பட்டபோது சிறுமி சுயநினைவின்றி இருந்துள்ளார். இதையடுத்து முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கி ஜாம் கம்பாலியா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சிறுமி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

சிறுமியின் தந்தை அப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும், சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறு நீண்ட காலத்திற்கு முன்பு தோண்டப்பட்டது, ஆனால் பின்னர் கைவிடப்பட்டு திறந்து விடப்பட்டதாக  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் ஆபத்துகள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT