கோப்புப் படம் 
இந்தியா

லக்னௌவில் கடும் குளிர்: ஜன.6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப் பிரதேசம், லக்னௌவில் அதிக குளிர் மற்றும் அடர்ந்து பனிமூட்டத்தையடுத்து ஜனவரி 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசம், லக்னௌவில் அதிக குளிர் மற்றும் அடர்ந்து பனிமூட்டத்தையடுத்து ஜனவரி 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவும், அதிகப்படியான குளிரையும் மக்கள் எதிர்க்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 

லக்னௌ மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 6-ம் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரின், மாவட்ட கல்வி அலுவலர் ராம் பிரவேஷ் அறிவித்துள்ளார். 

லக்னெள மாவட்டம் உள்பட மாநிம் முழுவதும் அதிகப்படியான குளிர் நிலவி வருகின்றது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 10 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்ட விதிமுறைகளைப் பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, வாராணசி மாவட்டத்திற்கும் 1 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.6 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - ஆஸி. போட்டி டிக்கெட் விற்பனை அமோகம்! 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன!

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

ராமதாஸுடன் இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை?

பிரேமலதா தாயார் காலமானார்!

எந்த வருத்தமும் இல்லை! தலைமை நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்குரைஞர் கருத்து!

SCROLL FOR NEXT