தில்லியில் உள்ள பவானா தொழிற்பேட்டையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பவானா பகுதியில் பயங்கர தீ விபத்து குறித்து நள்ளிரவு 1.40 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலை கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தொழிற்சாலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்தில் உயிரிழப்பும், காயமும் ஏற்பட்டதாக எந்தவித தகவல்களும் இல்லை எனத் தீயணைப்பு அதிகாரி ராம் கோபால் மீனா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.