இந்தியா

அழைப்பிதழ் தேவையில்லை, ராமர் நம் இதயத்தில் இருக்கிறார்: திக்விஜய் சிங்

அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல அழைப்பிதழ் தேவையில்லை என்றும் ராமர் நம் இதயத்தில் இருக்கிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் கூறியுள்ளார்.

DIN

அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல அழைப்பிதழ் தேவையில்லை என்றும் ராமர் நம் இதயத்தில் இருக்கிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

ராமர் கோயிலில் பழைய சிலை ஏன் பிரதிஷ்டை செய்யப்படவில்லை? புதிய சிலை எங்கிருந்து வருகிறது? அதற்கான அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, எனக்கு அழைப்பிதழ் தேவையில்லை. ராமர் நம் இதயத்தில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். கும்பாபிஷேக விழாவிற்கான வேத சடங்குகள் முக்கிய விழா ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 அன்று தொடங்க உள்ளது. வாராணசியைச் சேர்ந்த லக்ஷ்மி காந்த் தீட்சித் கும்பிஷேகததின் முக்கிய சடங்குகளை செய்ய உள்ளார். 

இதையடுத்து, இந்திய கூட்டனியின் ஒருங்கிணைப்பாளராக பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை தேர்ந்தெடுத்தது தொடர்பாக கேட்டபோது, அந்த விவாதத்தில் தாம் ஈடுபட விரும்பவில்லை என்றும், அது கூட்டணிக் கட்சியால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி... நித்யா மெனன்!

கடலோரக் கவிதைகள்... ரவீனா தாஹா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

காந்தாரா சேப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT