சந்திரசேகா் ராவை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி 
இந்தியா

சந்திரசேகா் ராவை சந்தித்து நலம் விசாரித்தார் ஜெகன்மோகன் ரெட்டி!

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) தலைவா் சந்திரசேகா் ராவை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஓய்.எஸ்.ஜெகன் மோகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

DIN

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) தலைவா் சந்திரசேகா் ராவை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஓய்.எஸ்.ஜெகன் மோகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும் பிஆா்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகா் ராவ் அவரது பண்ணை வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு இடப்பக்க இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

சிகிச்சை முடிந்து டிசம்பர் 15ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரசேகர் ராவ். இந்த நிலையில் தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில்,  நந்தி நகரில் உள்ள தெலங்கானா முன்னாள் முதல்வரின் இல்லத்திற்குச் சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேசிஆர்யை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

கேசிஆர்யின் மகனும் பிஆர்எஸ் செயல் தலைவருமான கே.டி.ராமராவ் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் ரெட்டியை வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT