இந்தியா

இண்டிகோ விமானங்களில் கட்டணம் குறைப்பு!

DIN

இண்டிகோ விமானப் பயணிகளுக்கு விதிக்கப்படும் எரிபொருள் கட்டணத்தை ரத்து செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் எரிபொருள் கட்டணத்தை அறிமுகம் செய்தது. 

அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300, அதிகபட்சமாக 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 எரிபொருள் கட்டணமாக விதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக விமான எரிபொருள் விலையை மத்திய அரசு குறைந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் இந்த எரிபொருள் கட்டண ரத்து நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT