இந்தியா

மிக மகிழ்ச்சியான தருணம்.. லட்சத்தீவிலிருந்து மோடி பகிர்ந்த புகைப்படங்கள்

ANI


லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தான் கடலில் நீச்சலடித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மிக மகிழ்ச்சியான தருணங்கள் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, கடலில் நீச்சலடித்த மற்றும் கடலோரத்தில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, லட்சத்தீவில் வேகமான இணையதள வசதி உள்பட ரூ.1,150 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை தொடங்கிவைத்தார். மேலும்,  பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 2) வருகை தந்த பிரதமா், பின்னா் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டாா். தலைநகா் கவரத்தியில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். லட்சத்தீவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சத்தீவு பரப்பளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், இங்குள்ள மக்களின் மனம் மிகப் பெரியது. எனக்கு இங்கு கிடைக்கப் பெற்ற அன்பு மற்றும் ஆசியால் நெகிழ்ந்து போயுள்ளேன். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் லட்சத்தீவு யூனியன் பிரதேசம், கண்ணாடி இழை கேபிள் மூலம் முதல்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் லட்சத்தீவில் இணையதள வேகம் 1.7 ஜிபிபிஎஸ்-இல் இருந்து 200 ஜிபிபிஎஸ்-ஆக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதன்மூலம் இணையதள சேவைகள், மின்னணு நிா்வாகம், இணையவழி மருத்துவ சேவைகள், எண்ம வங்கிச் சேவைகள் உள்ளிட்டவை மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமாவுக்கு பறந்த சிறகடிக்க ஆசை தொடர் நடிகை!

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

‘தேர்தல் ஆணையத்தின் பெரும் தோல்வி’: உயர்நீதிமன்றம்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பெரும்புள்ளிகள்!

நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்

SCROLL FOR NEXT