முகப்பு
இந்தியா

மேற்கு வங்க ரேஷன் ஊழலில் நகராட்சி முன்னாள் தலைவர் கைது! 

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக பொங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக பொங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. 

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் ரேஷன் விநியோகத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக  அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ள சொத்துகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சிமுல்டோலாவில் உள்ள அவரது இல்லத்தில் சங்கர் ஆதியா கைது செய்யப்பட்டார்.

ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக சங்கர் ஆதியாவுக்கு தொடர்பான அலுவலகம் மற்றும் பிற இடங்களில் குறைந்தது 17 மணி நேரம் தேடுதல் வேட்டை நடைபெற்றது. 

கைது செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் சங்கர் ஆதியாவை அழைத்துச் செல்லவிடாமல் தடுத்து, அவர்களின் வாகனங்களின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

அமலாக்கத்துறையுடன் வந்த சிஆர்பிஃப் வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர். அவர் கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →