முகப்பு
இந்தியா

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் கொலை!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Updated On : 7 ஜனவரி, 2024 at 5:21 PM
கோப்புப்படம்.
பகிர்:


மேற்கு வங்கம் பஹ்ராம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் சத்யேன் சௌதுரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். முர்ஷிதாபாத்தில் பொதுச்செயலாளராக செயல்பட்ட சத்யேன் சௌதுரி ஞாயிறு அன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சத்யேனைக் குறி வைத்து சுட்டுள்ளனர். காயப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.