அமைச்சர் சுரேந்திர பால் சிங் 
இந்தியா

ராஜஸ்தான்: ஒத்திவைக்கப்பட்ட தொகுதி தேர்தலில் அமைச்சர் தோல்வி!

ராஜஸ்தானில் கரண்பூா் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் அம்மாநில அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியை தழுவினார்.

DIN

ராஜஸ்தானில் கரண்பூா் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் அம்மாநில அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியை தழுவினார்.

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் கரண்பூரைத் தவிர 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. கரண்பூர் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் மரணத்தை தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் 115 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வா் பஜன்லால் சா்மா தலைமையில் புதிய அரசு அண்மையில் பதவியேற்றது.

இந்நிலையில், கரண்பூா் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தோ்தலில் பாஜக சாா்பில் மாநில அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சுரேந்திர பால் சிங், காங்கிரஸ் தரப்பில் குா்மீத் சிங்கின் மகன் ரூபிந்தா் சிங் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 12,750 வாக்குகள் குறைவாக பெற்று பாஜக வேட்பாளரும் மாநில அமைச்சருமான சுரேந்திர பால் சிங் தோல்வியை சந்தித்துள்ளார்.

இந்த தோல்வியால் ராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT