இந்தியா

சஞ்சய் சிங் ஜாமீன் மனு: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தில்லி கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

தில்லி கலால் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி விவகாரத்தில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்ததது. தற்போது நீதிமன்றக் காவலில் அவர்ல திஹார் சிலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

நீதிபதி ஸ்வர்னா காந்த சர்மா, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, இந்த வழக்கை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இந்த நிலையில், டிசம்பர் 22-ம் தேதி சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. 

சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மோஹத் மாத்தூர், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கடந்த 3 மாதங்களாக காவலில் இருப்பதாகவும், இந்த குற்றத்திற்கும் அவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ரத்து செய்யப்பட்ட கலால் கொள்ளையை உருவாக்கிச் செயல்படுத்துவதில் சிங்  முக்கிய பங்காற்றியாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது என்று தெரிவித்தார். 

எனவே, சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT