இந்தியா

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் குழந்தைப் பேறு..  கர்ப்பிணிகள் விருப்பம்

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள கர்ப்பிணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

DIN

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள கர்ப்பிணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் ஜனவரி 22-ஆம் தேதி குழந்தைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 15 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படும் நிலையில், ஜனவரி 22-ஆம் தேதி 35 கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நாளில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் இதுபோன்ற விருப்பங்கள் கர்ப்பிணிப் பெண்களின் குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட நாளில் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் சுகப் பிரசவம் ஏற்படுவதில் கடினம் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியபோதும், அறுவை சிகிச்சை மூலம் பெற்றுக் கொள்ள பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT