யோகி ஆதித்யநாத் (கோப்புப்படம்) 
இந்தியா

ராமர் கோயில் பிரதிஷ்டை நாளில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு! 

ராமர் கோயில் திறப்பு விழா நாளன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ராமர் கோயில் திறப்பு விழா நாளன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு, அதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அக்கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்க உள்ளனர். 

இந்நிலையில் ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை செய்யப்படும் நாளான ஜனவரி 22 (திங்கள்கிழமை) அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது உத்தரப் பிரதேச மாநில அரசு.

மேலும், இதனை 'தேசிய விழா' என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனவரி 22-ம் தேதி மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT