அயோத்தி ராமர் கோயில் | PTI 
இந்தியா

30 ஆண்டுகள் மௌன விரதத்தை முடிக்கவிருக்கும் பெண்! காரணம் இதுதான்!

ஜார்கண்ட் மாநிலத்தில் 85 வயதான பெண், 30 ஆண்டுகளாக மேற்கொண்ட மௌன விரத்ததை முடிக்கவிருக்கிறார். 

DIN

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தேவி எனும் 85 வயது பெண் முப்பது ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டுள்ளார். அதற்கான காரணம்தான் நம்மை வியக்கவைக்கிறது. 

1986-ல் கணவனை இழந்த சரஸ்வதி தேவி தன் வாழ்க்கையை ராமருக்காக அர்பணித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பல கோயில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

1992 டிசம்பர் 6 - ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தியான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோயில் கட்டப்படும்வரை மௌனவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். 

2020 வரை தினமும் 23 மணிநேரம் மௌனவிரதமும் மதியம் 1 மணிநேரம் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறார். 2020 - ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மௌனவிரதம் இருந்துள்ளார். 

அதிலிருந்து இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் பேசியுள்ளார். 2001 - ல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்திரகூட்டில் 7 மாதங்களுக்கு தவத்தில் ஈடுபட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

சரஸ்வதி கடந்த திங்கள்கிழமை இரவு அயோத்திக்கு தன் பயணத்தை துவங்கியிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி 22-ல் தனது மௌன விரதத்தை முடித்துக்கொள்ளவிருப்பதாகவும் சரஸ்வதியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

சரஸ்வதி ஒரு நாளில் 6 முதல் 7 மணிநேரங்களுக்கு தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், சைவ உணவுகள் மட்டுமே உண்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT