இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 95,000 பேர் சாமி தரிசனம்!

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒருநாளில் மட்டும் 95 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

சனிக்கிழமை (ஜன.13) வரை இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 95 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

ஜன.13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகரவிளக்கு பிரசாத சுத்திக்கிரியைகள் நடைபெறவுள்ளன. ஜன.14 ஆம் தேதி உஷபூஜைக்கு பிறகு பிம்ப சுத்தி பூஜை நடைபெறவுள்ளது. ஜன.15 ஆம் தேதி முன்பதிவு செய்த 40 ஆயிரம் போ் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படவுள்ளனா்.

மகரஜோதி: மகரவிளக்கு பூஜைக்காக திங்கள்கிழமை(ஜன.15 ) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெறவுள்ளது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னா் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, ஜன.15 மாலை 6.30 மணிக்கு திருவாபரணத்தை ஐயப்பனுக்கு சாா்த்தி மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னா் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.

மேலும் ஜன.15 -ஆம் தேதியிலிருந்து ஜன.18 ஆம் தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊா்வலம் நடைபெறவுள்ளது. ஜன.18- ஆம் தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜன.19 ஆம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.

ஜன.20 அன்று மாளிகைப்புரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது. ஜன.21-ஆம் தேதி காலையில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். பின்னா் பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT