கோப்புப் படம் 
இந்தியா

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் இணைய மக்களுக்கு அழைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் இணைய விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் இணைய விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்த இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மணிப்பூரில் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி பேருந்து பயணம் மற்றும் நடைப்பயணமாக 66 நாள்கள் 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மாா்ச் 20-ஆம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.

கடந்த 2022-ல் நடைபெற்ற முதல் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு பகுதிக்கும் ராகுல் காந்தி செல்லும் போது அவருடன் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து நடந்தனர்.

இந்த நிலையில், இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் +91 9891802024 என்ற தொலைப்பேசி எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராகுல் காந்தியின் நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் நேற்று மாலை அம்மாநில அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

ரிலையன்ஸில் இணைந்த முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி! இரு முதல்வர்களைக் கைது செய்தவர்!

SCROLL FOR NEXT