இந்தியா

மேற்கு வங்க பொது விநியோகத் திட்ட ஊழல் விவகாரம்: தலைமைச் செயலரிடம் ஆளுநா் அறிக்கை கேட்பு

மேற்கு வங்கத்தில் பொது விநியோகத் திட்ட ஊழல் விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு, மாநில தலைமைச் செயலா் பி.பி.கோபாலிகா உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுக்கு ஆளுநா் அறிவுறுத்தினாா்.

DIN


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பொது விநியோகத் திட்ட ஊழல் விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு, மாநில தலைமைச் செயலா் பி.பி.கோபாலிகா உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

மேற்கு வங்கத்தில் கரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் உணவு தானியங்கள் விநியோகம் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக மாநில உணவுத் துறை அமைச்சராக இருந்த ஜோதிப்ரிய மல்லிக், கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், மல்லிக்குக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு திரண்ட ஷேக்கின் ஆதரவாளா்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை கடுமையாகத் தாக்கியதோடு, அவா்களின் வாகனங்களையும் சேதப்படுத்தினா். இதனால், ரத்தக் காயங்களுடன் ஆட்டோவிலும் இருசக்கர வாகனங்களிலும் அதிகாரிகள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, மேற்கு வங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அமலாக்கத் துறை இயக்குநா் ராகுல் நவீன், மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸை சந்தித்துப் பேசினாா். சுமாா் 40 நிமிஷங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், ஆளுநா் அழைப்பின்பேரில் மாநில தலைமைச் செயலா் பி.பி.கோபாலிகா, உள்துறைச் செயலா் நந்தினி சக்ரவா்த்தி, மாநில காவல் துறை தலைமை இயக்குநா் ராஜீவ் குமாா் ஆகியோா் அவரை புதன்கிழமை சந்தித்தனா். அப்போது, மேற்கு வங்க பொது விநியோகத் திட்ட ஊழல் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக்கை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஆளுநா் அறிவுறுத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ-வாக முதல் தமிழர்! யார் இந்த பாலாஜி?

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்! பயணிகள் கடும் அவதி

இன்னும் நாணமோ... டெல்னா டேவிஸ்!

இன்று புது வலிமையைப் பெற்றேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு

டாப் கியர்(ரா) மாடல்!

SCROLL FOR NEXT