கோப்புப் படம். 
இந்தியா

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: தேவெ கௌடா 

தனது வயதைக் கருத்தில் கொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் தேவெ கௌடா தெரிவித்தார். 

DIN

தனது வயதைக் கருத்தில் கொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் தேவெ கௌடா தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் (மக்களவைத்) தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. எனக்கு இப்போது 90 வயது. தேர்தலில் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன். எனக்கு பேசும் சக்தியும் ஞாபக சக்தியும் உண்டு. 

அதன் மூலம் நான் பிரசாரம் செய்வேன்.

மக்களவைத் தேர்தலில் மஜத தலைவர் எச்.டி.குமாரசாமி போட்டியிடுவது குறித்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் பின்பற்றப்படும். ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொள்கிறேன் என்றார். 

வரும் மக்களவைத் தேர்தலை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கைகோர்த்து மதசார்பற்ற ஜனதா தளம் சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT