பிரபா ஆத்ரே | Facebook 
இந்தியா

ஹிந்துஸ்தானி பாடகி பிரபா ஆத்ரே காலமானார்

1932-ல் பிறந்த ஆத்ரே, பன்முகங்களைக் கொண்ட ஆளுமையாக திகழ்ந்துள்ளார். 

DIN

புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகர் டாக்டர். பிரபா ஆத்ரே, 92 வயதில் காலமானார்.

ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற கிரானா கரானா இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இந்திய அரசின் உயரிய விருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார்.

புனேவில் உள்ள அவரது இல்லத்தில் உறக்கத்தின்போது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார்.

1932-ல் பிறந்த ஆத்ரே, இசை கற்றுக்கொள்ள மறுக்கப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்து ஆர்வத்தின் காரணமாக இசைத்துறைக்குள் நுழைந்தார்.

பிரபா ஆத்ரே, இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் அறிவியல், சட்டம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்று பன்முகங்களைக் கொண்ட ஆளுமையாக திகழ்ந்துள்ளார்.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது  2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

1990-ல் பத்மஸ்ரீ விருதும் 2002-ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

ஒரு பார்வையில்... உதய்பூரில்... நம்ரதா சோனி!

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய்... நிதி அகர்வால்!

தோற்றங்கள் பலவிதம்... கிருத்தி சனோன்!

SCROLL FOR NEXT