முசாபர்நகர்: அடர்த்தியான பனி சூழ்ந்த பகுதியில் பார்வை மட்டுப்படாததால் டிராக்டர் விபத்துக்குள்ளாகியது.
டிராக்டரை ஓட்டிச் சென்ற இருவர், கால்வாயில் வண்டி கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திங்கள்கிழமை இரவு, சாம்லி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கூடுதல் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங் பேசும்போது, பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த சன்னி (20) மற்றும் ஆகாஷ் (19) ஆகிய இருவரும் பலியாகியதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: படகு விபத்து: 8 பேர் பலி, 100 பேர் மாயம்
வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமை அதிகாலை ஊர் மக்களால் இந்த விபத்து கவனிக்கப்பட்டு காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.