சக்திகாந்த தாஸ் 
இந்தியா

நாட்டின் பொருளாதார வளர்ச்சி...: ஆர்பிஐ கவர்னர்

வருகிற நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் பேசியுள்ளார்.

DIN

நாட்டின் பொருளாதாரம், வருகிற நிதியாண்டில் 7 சதவிகித வளர்ச்சி விகிதத்தை எட்டும் எனவும் பணவீக்கம் இலகுவாகும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்துல்ளார்.

சமீப ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட அமைப்புரீதியான மாற்றங்களால் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சி அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உலக பொருளாதார மாநாட்டில் பங்கெடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர், பன்னாட்டளவிலான நிலவரம், பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தபோதும் பணவீக்கம் வீழ்ச்சியடைவதைக் காட்டுவதாக அவர் கூறினார்.

அவர், ”வளர்ச்சி மிதமான அளவுக்கு குறையும்போதும் பொருளாதாரம் சீராக இருக்கும் வாய்ப்புகள், சந்தையில் சாதகமான சூழல் ஆகியவை நிலவும். எனினும் புவிசார் மற்றும் காலநிலை அபாயங்கள் நீடிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி- 7.2 சதவிகிதம் அளவுக்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகம் புறம்... அனுஷ்கா சென்!

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

டைஸ் ஐரே படத்தின் டிரெய்லர்!

வியர்வை சிந்தும் வேலவர்!

அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT