இந்தியா

ஐடி நிறுவனத்தைச் சுற்றி திரிந்த சிறுத்தை: தேடுதல் பணியில் வனத்துறை

DIN

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளாகத்தில் சுற்றி திரிந்த பெண் சிறுத்தை மற்றும் அதன் இரு குட்டிகளைத் தேடும்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் சிறுத்தை முதலில் செவ்வாய்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சூப்பர் காரிடர் பகுதியில் தென்பட்டது. இன்போசிஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி அது.

அதற்கு அருகில் உள்ள வேளாண் நிலத்தில் புதன்கிழமை சிறுத்தைகளைப் பார்த்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கோதுமை விளைவிக்கப்பட்ட நிலத்தில் குட்டிகளைப் பாதுகாப்பாக பெண் சிறுத்தை மறைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வட்டார வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இன்போசிஸ் வளாகத்தில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

130 ஏக்கர் அளவில் விரிந்த பகுதியில் அமைந்திருக்கும் இன்போசிஸ் அலுவலகத்தைச் சுற்றி புல் மற்றும் புதர்கள் மண்டி காணப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தின் வணிக தலைநகரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த ஐடி நிறுவனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT