குருவாயூர் கோயிலில் மோடி தரிசனம் 
இந்தியா

குருவாயூர் கோயிலில் மோடி தரிசனம்!

கேரளத்தில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் புதன்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார்.

DIN

திருச்சூர்: கேரளத்தில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் புதன்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார்.

கொச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமத் கான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, கொச்சியில் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்த மோடிக்கு சாலைகளின் இரு புறங்களிலும் குவிந்திருந்த பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். 

இந்த நிலையில், இன்று காலை குருவாயூரப்பன் கோயிலில் மோடி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொச்சியின் வில்லிங்டன் தீவில், ரூ.4,000 கோடியில் கட்டப்பட்ட கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய உலர் கப்பல்துறையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT