இந்தியா

125 முறை பத்திரப்பதிவு செய்யப்பட்ட 6 குடியிருப்புகள்: இப்படியும் ஒரு முறைகேடு

வங்கி மோசடிப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 6 குடியிருப்புகளை 125 முறை பத்திரப்பதிவு செய்து, வீட்டுக் கடன் மோசடி செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

DIN


கொல்கத்தா: துப்பறியும் துறையின் வங்கி மோசடிப் பிரிவினர் நடத்திய விசாரணையில், 6 குடியிருப்புகளை 125 முறை பத்திரப்பதிவு செய்து, வீட்டுக் கடன் மோசடி செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வழக்கில், ஒரு தனியார் வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1.2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குடியிருப்பின் உரிமையாளர், அந்த வீட்டை விற்பவர் போலவும், சிலர், அந்த வீட்டை வாங்குவது போலவும் நடித்து, போலியான ஆவணங்களைக் காட்டி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று இதர 6 தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளின் மூலம் சுமார் ரூ.10 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வீடுகளைக் கட்டிய உரிமையாளர் அதனை பல்வேறு தனியார் வங்கிகளில் விற்பனை செய்வது போல மோசடி செய்துள்ளதும், 6 குடியிருப்புகள் 125 முறை பத்திரப்பதிவு செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு இறுதிவரை நடந்துள்ளது. இதில் தொடர்புடைய 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு வங்கிக் கடன் கொடுத்திருப்பதாக, சில தனியார் வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT