இந்தியா

ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக் கைதி!

DIN

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு சிறைக் கைதி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர் மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவர் ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.

அதையடுத்து உடனடியாக அந்த கைதி மீதும், மத்திய சிறையின் இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் கூறினார்.

சிறைக்குள் கைபேசிகள் கடத்திச் செல்லப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதை தடுக்காத காரணத்தால் ஜெய்ப்பூர் மத்திய சிறையின் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைக்குள் கைபேசிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அனைத்து சிறைச்சாலைகளிலும் விரைவில் சோதனை நடத்தப்படும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது என்று அமைச்சர் ஜவஹர் சிங் உறுதியளித்தார்.

முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் ஆவார். புதன்கிழமை கைபேசியில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட கைதி, முதல்வரை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அதனையடுத்து அழைப்பு வந்த எண்ணை ஆராய்ந்தபோது அது ஜெய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து வந்தது என்று கண்டறியப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT