இந்தியா

காஷ்மீர் வானிலை...

DIN

காஷ்மீரில் மிதமான பனி மற்றும் மழை அடுத்த வாரத்தில் ஏற்படலாமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளத்தாக்கில் நீடித்த வறட்சியான வானிலை ஜன.24 ஆம் தேதியோடு முடிவுபெறும் எனவும் சனிக்கிழமை மாலை மேகமூட்டத்துடன் வானம் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.25-ல் ஜம்மு காஷ்மீரின் உயரமான பகுதிகளில் மிதமான பனிப்பொழிவு இருக்கலாம் எனவும் ஜன.26-28 தேதிகளில் மிதமான மழை மற்றும் பனி பொழிவுக்கு பரவலான இடங்களில் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன.29 முதல் 31 வரை மிதமான மற்றும் நடுத்தர மழை/பனிப் பொழிவு பல்வேறு இடங்களில் ஏற்படலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வறட்சியான மற்றும் பனி குறைந்த குளிர்காலம், காஷ்மீரில் உறையவைக்கும் இரவுகள் மற்றும் வழக்கத்தைவிட அதிக வெப்பமான நாள்களுக்குக் காரணமாகியுள்ளது.

ஸ்ரீநகர் பகுதியில் மிகக் குறைந்த வெப்பநிலை மைனஸ் 4.9 டிகிரி செல்சியஸ் வியாழக்கிழமை நிலவியதாகவும் முந்தைய இரவின் வெப்பநிலையான மைனஸ் 4.6 டிகிரி செல்சியஸை விட இது அதிகமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா.வில் தீா்மானம் நிறைவேற்றம்

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT