இந்தியா

மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஜாதி, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பாஜக நாட்டை பிளவுபடுத்துவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

DIN

ஜாதி, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பாஜக நாட்டை பிளவுபடுத்துவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப்  பயணம் அருணாசலில் நுழைந்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது:  மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் பாஜக மக்களிடையில் சண்டையை ஏற்படுத்துகிறது. சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பாஜக வேலை செய்கிறது. அவர்கள் மக்களின் நலனுக்காக செயல்படவில்லை. மாறாக, காங்கிரஸ் மக்கள் நலனுக்காவும், அவர்களது ஒற்றுமைக்காவும் உழைக்கிறது. நாங்கள் அருணாசல பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கினோம். அருணாசல் மக்களின் நலனுக்காகவும், இளைஞர்களின் நலனுக்காவும் நாங்கள் குரல் கொடுப்போம். நாட்டில் மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டத்தை பாஜக உருவாக்கியுள்ளது. பாஜக ஆட்சியில் மக்களின் குறைகளைக் கேட்க அரசும் தயாராக இல்லை, ஊடகங்களும் அந்த விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. இந்த இந்திய ஒற்றுமை நீதிப்  பயணத்தின் மூலம் மக்களின் துயரங்களைக் கேட்டறிந்து வருகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT