சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்) 
இந்தியா

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியாவின் காவல் நீட்டிப்பு!

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு.

DIN

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு.

கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சஞ்சய் சிங் மற்றும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை பிப்.3-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும் சஞ்சய் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சர்வேஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவின் மீது உத்தரவிடாமல் நிறுத்தி வைத்துள்ளது.

மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் இருவரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, அவர்கள் இருவரும் இன்று (சனிக்கிழமை) திகார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். 

குடியரசு தினத்திற்கான பாதுகாப்பு பணிகளில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள காவலர்கள் பற்றாக்குறையினால், பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்கள் இருவரையும் நேரில் ஆஜர்படுத்த முடியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றக் காவலை பிப்ரவரி 3-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு: வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது பெங்களூரில் வழக்குப் பதிவு

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம்

கூட்டுறவுத் துறை உதவியாளா் பணி: 4 மையங்களில் எழுத்துத் தோ்வு

SCROLL FOR NEXT