முகப்பு
இந்தியா

அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தார் பிரதமர் மோடி!

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்கப் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தார் பிரதமர் மோடி!
பகிர்:

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்கப் பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்னும் சற்று நேரத்தில் திறக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில், பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறும் மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். 

பெரிய தட்டில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருள்களுடன் கோயிலுக்குள் வந்தார் பிரதமர். 

அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மலர்த்தோரணம், கலைநயம் மிக்க சிற்பங்கள், அலங்கார விளக்குகள் என அயோத்தி நகரம் மிளிர்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.