இந்தியா

அயோத்தியில் தடுப்புகளை உடைத்தெறிந்து அத்துமீறிய மக்கள் கூட்டம்! 

அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி பக்தர்கள் கூட்டம் உள்ளே நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி பக்தர்கள் கூட்டம் உள்ளே நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 3 மணிக்கே கோயிலின் பிரதான வாயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

பொதுமக்கள் அத்துமீறி உள்ளே நுழையாதபடி பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், கூட்ட மிகுதியின் காரணமாக பொறுமையிழந்த மக்கள் போலீஸார் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு கோயிலின் உள்ளே நுழைந்தனர். இதனால், பக்தர்கள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. 

லக்னௌ மண்டலத்தின் கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா கூறுகையில், 

தரிசனம் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அதிகளவில் திரண்டிருப்பதால் கூடுதல் நேரமாகிறது. மக்கள் பொறுமை இழக்காமல் காத்திருக்க வேண்டும். அனைவருக்கும் தரிசன வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT