உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்) 
இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு: உடனடி அமலுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

DIN

மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு கடந்தாண்டு நிறைவேற்றியது.

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில், இடஒதுக்கீடு சட்டத்தை வருகின்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், விரிவான பதிலளிக்க 2 வார காலஅவகாசம் கோரினார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தவசுக் காட்சி

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

காமராஜா் சாலையில் திருநங்கைகள் மறியல்

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT