இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிப்பு!

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சில நீண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் தொடர்பாக பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ.

இதையும் படிக்க | 

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஏர் இந்தியா நிறுவனத்தினால் இயக்கப்படும் விமானங்களின் பாதுகாப்பு மீறல்கள் குறித்து விமான ஊழியர் ஒருவர் கூறிய புகாரைத் தொடர்ந்து விரிவான ஒழுங்குமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட விசாரணைக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என்பதால் அந்நிறுவனத்திற்கு டிஜிசிஏ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த பாதுகாப்பு அறிக்கையானது ஏர் இந்தியா நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களின் பாதுகாப்புடனும் தொடர்புடையதாகும். 

இதையும் படிக்க | 

"குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு  ஏற்றதாக இல்லை என்பதால், டிஜிசிஏ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது ஏர் இந்தியா மீது ரூ. 1.10 கோடி அபராதம் விதித்துள்ளது" என்று டிஜிசிஏ அமைப்பு கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT