இந்தியா

குடியரசு தினம்: நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவின் நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒடிசா டிஜிபி அருண்குமார் சாரங்கி கூறுகையில், 

விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக விஐபி.க்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

நாசவேலைகள் நடைபெறாமல் இருக்க நக்சல் பாதித்த பகுதிகளில் குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை முழுவதும் ரோந்துக் குழுக்களால் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.  தற்போதைய நிலைமை சாதாரணமாக உள்ளது. நெடுஞ்சாலையைக் கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாய் படையும் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

என்ன பார்வை?

SCROLL FOR NEXT