இந்தியா

'எதுவும் சரியாக இல்லை..’: நிதீஷ் குமார்

DIN

பிகார் ஆளுநரைச் சந்தித்த நிதீஷ் குமாா் முதல்வா் பதவியை  ராஜிநாமா செய்துள்ளார். மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும்  முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்கெனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், நிதீஷ் குமாா் அணி மாறியது அக்கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

பிகாரில் கடந்த 2020, சட்டப் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. கடந்த 2022, ஆகஸ்டில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். ஆனால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு மீண்டும் பாஜக கூட்டணிக்குத் திரும்பியுள்ளார்.

பதவியை ராஜிநாமா செய்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதீஷ் குமார், “என் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். ஆளுநரிடம் மாநில ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனக் கூறியுள்ளேன். இந்தச் சூழலுக்கு வந்ததற்குக் காரணம்,  எதுவும் சரியாக இல்லை. அனைவரின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்டேன். இன்று அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT